/* */

வேளாண்மை துறை இணை இயக்குனர் பல கோடி ஊழல்: விவசாய சங்கம் புகார்

விளை நிலங்களை தரிசு நிலங்கள் என அனுமதியளித்து பலகோடி ஊழல் செய்துள்ளததாக காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குனர் மீது விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

வேளாண்மை துறை இணை இயக்குனர் பல கோடி ஊழல்: விவசாய சங்கம் புகார்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது.

விவசாயத்திற்கான பெயர் பெற்ற மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்று. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளது இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கீழ் பலநூறு ஏரிகளும் குளங்களும் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் இரு போகம் பயிர் செய்யும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும், இதேபோல் முப்போகம் செய்யும் விளைநிலங்களும் அதிகம் உள்ளது.

மேலும் நீர் ஆதாரமாக பாலாறு செய்யாறு வேகவதி உள்ளிட்ட ஆறுகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில மற்றும் கிராம நெடுஞ்சாலை ஓரம் உள்ள விளைநிலங்களை விவசாயிகளிடம் தந்திரமாக பேசி அதை ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களுக்கு உரியதாக மாற்றிக்கொள்ள அந்த நிலங்கள் தரிசாக மாற்றி வீட்டு மனைகளாக விற்பனை செய்கின்றனர்.

வீட்டு மனை விற்பனைக்கு நகர ஊரமைப்பு மற்றும் வேளாண்மைத் துறையின் அனுமதி கட்டாயம் அவசியம். விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக உள்ளதாக வேளாண்மை துறை சான்றிதழ் மட்டுமே அந்த நிலங்கள் வீட்டு மனைப் பிரிவுகளாக மாற்றப்படும்.

அவ்வகையில் அதனை மாற்ற வேளாண்மை துறை இணை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளித்து விட்டு அதனை தரிசு நிலமாக மாற்றி தர பல்வேறு முறைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்து வருவதாகும்.

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் இதுபோன்ற முறைகேடுகள் அதிக அளவு ஈடுபடுவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலம் என மாற்றி அதை வீட்டுமனைகள் விற்பனை செய்து வருவது அதிகரித்து வரும் நிலையில் இதற்கு உறுதுணையாக அந்த அதிகாரி பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என விவசாய சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் கே.நேரு கூறுகையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை தரிசு நிலங்கள் எனக் கையொப்பமிட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்ய அனுமதி அளித்து வருவதாகவும் இதற்காக பல கோடி ரூபாய் கையூட்டு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எவ்வளவு நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது ஓராண்டுக்கு பின்னரே கடும் போராட்டத்திற்கு பின் தற்போது அத்தகவலை அத்துறை அளித்துள்ளது எனவும்.

அதில் பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்கள் என சான்றளித்துள்ளது முறைகேட்டிற்கு அம்பலமாகியுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண்மை இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,

மேலும் விவசாயிகளுக்கு அரசு அளித்துவரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் முறையாக விளம்பரம் செய்து விவசாயிகள் பயனடையும் வகையில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 25 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !