/* */

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில்  நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 300 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில்,மேட்டூர் அணைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 82 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 67 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 53.47 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 53.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 19.95 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 1 May 2024 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு