/* */

" தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே " : பெருநகராட்சி பாராட்டு

"தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே “ என நகராட்சி துப்புரவு பணியாளர் குறைதீர்க்கும் கூட்டத்தில் நகராட்சி மருத்துவர் கூறியது பணியாளர்களை நெகிழச் செய்தது.

HIGHLIGHTS

 தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே  : பெருநகராட்சி பாராட்டு
X

கொரோனா காலத்தில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பணியாளருக்கு ஆணையர் மகேஸ்வரி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.உடன் நகர்நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் நகராட்சி அலுவலர்கள்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நகராட்சி அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி வாரியாக துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காலத்தை ஆணையர் விளக்கிக் கூறினார். இதில் வார விடுமுறை , மருத்துவ பரிசோதனை, உபகரணங்கள் மற்றும் வீடு ஒதுக்கீடு இவைகளை துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதில் பேசிய பெருநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் முத்து , இன்று மருத்துவர் தினம் கொண்டாடும் நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே எனவும், நோய் வருவதற்கு முன்பு தூய்மை பணிகளை மேற்கொண்டு பொதுமக்களை காத்து வருவதால் இன்றைய தினம் உங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய ஆணையர் மகேஸ்வரி காஞ்சிபுரம் பெரு நகராட்சி துப்புரவு பணிகள் முன்னணியில் உள்ளது என அனைத்து கூட்டங்களிலும் அதிகாரிகள் பாராட்டி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதற்கு உறுதுணையாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் குறைகள் துரிதமாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களை மருத்துவர்கள் என கூறி பேசிய மருத்துவரின் செய்கை கண்டு பலர் நிகழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 1 July 2021 10:30 AM GMT

Related News