/* */

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மக்கள் தயக்கமா ?

Public Grievance -மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை காலை துவங்கி 1மணி வரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மக்கள் தயக்கமா ?
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க குறைவான பொதுமக்கள் வந்திருந்ததால் வெறிச்சோடி கிடக்கும் கூட்டரங்கம்.

Public Grievance -காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளாகத்திலுள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் மக்கள் குறைப்பிற்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் , கிராம பதிவேட்டில் ஏற்றம் , குடும்ப அட்டை கூறுதல் , இட பிரச்சினை , நலத்திட்ட உதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிப்பர்.

இதனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் உரிய அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்து இதற்கு இதன்பேரில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை தெரிவிக்க காத்திருந்த இடத்தில் நேரில் சென்று அவர்களிடம் மனுக்களை பெற்று உரிய அலுவலரிடம் பரிந்துரை செய்தார்.

மேலும் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவே பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிக்க இன்று வந்திருந்தனர்.

உத்திரமேரூர் அடுத்த கம்மாள பூண்டி இருளர் பகுதியை பழத்தோட்டதம் சர்வே எண் : 5,15 ஆகியவரின் கீழ் 67 நபர்களுக்கு கடந்த 1996 ல் பட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது வரை கிராம பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாததால் இன்று அப்பகுதியை சேர்ந்த 20 பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

வாலாஜாபாத் வட்டம் , முத்தியால் பேட்டை ஊராட்சியில் இந்திரா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பதாகவும் , இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவதாக கூறி நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை காவல்துறை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இஇதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி 41 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாக்கியலட்சுமி நகரில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மாநகராட்சியின் அனுமதியின்றி எந்த விதமான வரி இனங்களும் இல்லாத நிலையில் விதிகளுக்கு புறம்பாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டிட அனுமதி பெறாமல் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் , இதனை ஆய்வு செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கும்படி அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் எஸ். சிந்தன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா வழங்கினார்.

ஒவ்வொரு குறைக்கும் நாள் கூட்டத்திலும் 300க்கும் மேற்பட்ட அணுக்கள் வரும் நிலையில் பகல் 12 மணி வரை 100 மனுக்களை மாவட்ட நிர்வாகத்தினால் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 8:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...