/* */

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில், டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பேருந்து மோதியதில், 15 ஊழியர்கள் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் கம்பெனிக்கு, உதிரிபாகங்கள் தயாரித்து சப்ளை செய்யப்படும் தொழிற்சாலைக்கு, இரண்டாவது ஷிப்ட் பணி முடித்துவிட்டு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் தொழிற்சாலை பேருந்தில், சென்னை - பெங்களூரு மார்க்கமாக சென்று கொண்டிருந்னர்.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் தொழிற்சாலை பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 ஊழியர்கள் சிறு மற்றும் பெரு காயங்களுடன் அவதிப்பட்டனர்.

அப்பகுதியாக வந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாலுசெட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!