/* */

இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று சூரியசக்தி மின் விளக்கு துவக்கம்

ரோட்டரி சங்கத்தின் சார்பில் இருளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் விளக்கு துவக்க விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று சூரியசக்தி மின் விளக்கு துவக்கம்
X

இருளர் குடியிருப்பு பகுதியில் சூரியசக்கி மின் விளக்கை தொடங்கி வைத்த கோட்டாட்சியர் சாய்வர்தினி.

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் இருளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் விளக்கு துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட தலைவர் வின்சென்ட், விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிவகுமார் மற்றும் சிறப்பு திட்ட தலைவர்கள் வெங்கடாஜலபதி, தெய்வீகன், ஜெய் சிங், மோகன்ராஜ் முத்துகுமாரசாமி, செல்வ போதகர் முன்னாள் கவுன்சிலர் சிவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி அவர்கள் கலந்து கொண்டு சூரிய மின்சக்தி விளக்கு திட்டத்தை துவக்கிவைத்து, இருளர் குடியிருப்பு வாசிகளுக்கு ரூபாய் 5000 மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் இருளர் குடியிருப்புவாசி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Oct 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்