ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி : 700 மாணவர்கள் பங்கேற்பு
![ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி : 700 மாணவர்கள் பங்கேற்பு ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி : 700 மாணவர்கள் பங்கேற்பு](https://www.nativenews.in/h-upload/2025/02/11/1976939-ytrtuy.webp)
ஈரோடு : ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நிர்வாக மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற திறன் போட்டியில் 700 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மேனோபோலி 2கே25 என்ற திறன் போட்டி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.கல்லூரியின் தாளாளர் பி. டி தங்கவேல் தலைமை வகித்தார். முதல்வர் ஹெச். வாசுதேவன் முன்னிலை வகித்தார்.நிர்வாக மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் எம். தங்கம் வரவேற்றார்.
போட்டிகளின் நோக்கம்
துறைத் தலைவர் கே. பி. கார்த்திகேயன் நிகழ்வின் நோக்கம் குறித்துப் பேசினார். எம்சிஆர் டெக்ஸ்டைல் நிறுவன நிர்வாக இயக்குநர் எம். சி. ரிக்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், குழு நடனம், தனி நபர் நடனம், மௌன மொழி நடனம், மீம்ஸ், புகைப்படக் கலை, மெகந்தி, வணிக விளம்பர உத்தி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் தமிழக முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கல்லூரியின் தாளாளர் பி. டி. தங்கவேல் வழங்கினார்.
இந்நிகழ்வை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக மேலாண்மைத் துறை பேராசியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து நடத்தினர். கல்லூரியின் நிர்வாக மேலாண்மைத் துறை இணைப்பேராசிரியர் ஜி. மஞ்சு நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu