தீபாவளி: சத்தி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,540-க்கு விற்பனை
சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் நடக்கும் காட்சி (கோப்பு படம்).
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் ஜாதிமுல்லை நேற்று ரூ.1,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,250-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் தினசரி பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பவானிசாகர், புளியம்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மல்லிகைப்பூ, காக்கடா, ஜாதி முல்லை, கனகாம்பரம் , அரளி , சம்பங்கி உள்ளிட்ட பல பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலம் முறையில் விலை நிர்ணயிக்கப்பட்டு பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு விற்பனையாகும் பூக்களானது ஈரோடு, கோவை , திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பூ மார்க்கெட்டில் சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் தொடங்கி உள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்கள் செடியிலேயே உதிர்ந்து விழுந்து விடுவதால் பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.இதனையடுத்து, நாளை திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நேற்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,557-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.17 குறைந்து ரூ.1,540-க்கு விற்பனையானது. இதே போல் ஜாதிமுல்லை ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.250 அதிகரித்து ரூ.1,250-க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது. இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-
மல்லிகைப்பூ - ரூ.1,540 ,
முல்லைப்பூ - ரூ.1,400 ,
காக்கடா - ரூ.1,400 ,
செண்டுமல்லி - ரூ.75 ,
கோழிக்கொண்டை - ரூ.69 ,
ஜாதி முல்லை - ரூ.1,250 ,
கனகாம்பரம் - ரூ.600 ,
சம்பங்கி - ரூ.70 ,
அரளி - ரூ.250 ,
துளசி - ரூ.50 ,
செவ்வந்தி - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையிலும், ஐப்பசி மாத பூஜைக்கு பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால், தொடர்ந்து பூக்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu