ஈரோட்டில் சேவல் வைத்து மெகா சூதாட்டம் 20 பேர் கைது - ரூ.1.32 லட்சம் பறிமுதல்
சேவல் சூதாட்டத்தில் தாலுகா போலீசார் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை படத்தில் காணலாம்.
ஈரோட்டில் சேவல் வைத்து மெகா சூதாட்டம் நடத்திய 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.32 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது. போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சரவணன் (வயது 45), மூர்த்தி (வயது 44), சிவா (வயது 30), கருப்பண்ணன் (வயது 50), மணிகண்டன் (வயது 30), செந்தில் (வயது 50), ஸ்ரீ ஹரி (வயது 21), பழனிவேல் (வயது 38), கிருஷ்ணராஜ் (வயது 25), ஜெகதீஷ் (வயது 46), தங்கராஜ் (வயது 49), தனசேகரன் (வயது 45), குமார் (வயது 43), தமிழ் (வயது 21), சோமு (வயது 55), குகன் (வயது 35), செந்தில் ராஜா (வயது 41), நாகராஜன் (வயது 44), சுரேஷ்குமார் (வயது 38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.
இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து 12 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.1.32 லட்சம் பணம், 32 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu