சித்தோட்டில் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சித்தோட்டில் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

சித்தோட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சித்தோடு ஆவின் நிறுவனம் முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் நிறுவனம் முன்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஏ. ராஜு தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் கே. ராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் இரா. ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் வி. அரிகரன், சி. பெரியண்ணன், துணைச் செயலாளர்கள் எஸ். பழனிவேல், என். கணேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ. 42, எருமைப் பாலுக்கு ரூ. 51 என உயர்த்தி வழங்க வேண்டும்.பாலின் தரம், அளவுப்படி பணம் வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் கறவை மாடுகளுக்கு கால்நடை காப்பீட்டுத் திட்டத்தை அளிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு 50 சத மானியத்தில் கால்நடைத் தீவனம் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தில் பாலை சேர்க்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

மாநிலத் துணைச் செயலாளர்கள் முருகேசன், வெங்ட்ராமன், மாவட்டச் செயலாளர் கே. கே. பிரபு, மாவட்டப் பொருளாளர் கே. பி. துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!