சத்தியமங்கலம்: தாளவாடி அருகே ராகி பயிரால் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து
ராகி பயிரால் அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி நிற்பதை படத்தில் காணலாம்.
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த ராகி பயிரால் அரசு பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள பனங்கள்ளி கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு அரசு பேருந்து ஒன்று தாளவாடி நோக்கி இன்று (ஜன.24) காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது, மெட்டல்வாடி கிராமம் அருகே வந்த போது, சாலையில் உலர கொட்டப்பட்டு இருந்த ராகி பயிரில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கி தாறுமாறாக ஓடி பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
மேலும், கடந்த 16ம் தேதி இதே வழியாக சென்ற கார் கொள்ளு பயிர் டயரில் சிக்கியதால் விபத்து ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. இதில், காரில் இருந்த 7 பேரும் உயிர் தப்பினர். இந்நிலையில், ராகி பயிரால் அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu