ரூ.லட்சக்கணக்கில் மது விற்பனை: 10 பேர் கைது 246 பாட்டில்கள் பறிமுதல்..!

ரூ.லட்சக்கணக்கில் மது விற்பனை: 10 பேர் கைது 246 பாட்டில்கள் பறிமுதல்..!
X
ரூ.லட்சக்கணக்கில் மது விற்பனை: 10 பேர் கைது 246 பாட்டில்கள் பறிமுதல்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 246 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தைப்பூசத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சுண்ணாம்பு ஓடை பகுதியில் மது விற்பனை

அப்போது, ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த மலிங்கா (43) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

மொத்தம் 10 பேர் கைது, 246 மதுபாட்டில்கள் பறிமுதல்

அதேபோல டி.என்.பாளையத்தில் மது விற்ற குமரன் கோயில் வீதியைச் சேர்ந்த சண்முகம் (63), சேவாகவுண்டர் புதூரில் மது விற்ற காசிலிங்கபுரம் மேட்டைச் சேர்ந்த ஆறுமுகம் (63), உள்பட மொத்தம் 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 246 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும், 16 பேரை கைது செய்த போலீசார், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள்