விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்..!

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்..!
X
விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். இதில் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

விசைத்தறிகளின் ஒலி சப்த மாசு

விசைத்தறிகளில் இருந்து வெளிப்படும் ஒலியை சப்த மாசாக கருதி மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கூட்டமைப்பின் கருத்து கேட்ட பிறகே தீர்வு காண வேண்டும்.

விசைத்தறிகளை நவீனமயமாக்கல்

விசைத்தறிகளை நாடா இல்லாத நவீனமயமாக்கப்பட்ட தறிகளாக மாற்றுவதற்கு, 50 சதவீத மானியத்தை மத்திய அரசும், 50 சதவீத மானியத்தை மாநில அரசும் வழங்கி விசைத்தறிகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை முன் எடுக்க வேண்டும்.

விசைத்தறிகளுக்கு சொத்து வரி விலக்கு

தமிழக அரசின் மின் மானியத்தில் பயனாளியாக இயங்கும் அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும், உயர்த்தப்பட்ட சொத்து வரியில் இருந்து விலக்களித்து, விசைத்தறிகளை அரசு காக்க வேண்டும்.

இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டம்

வரும் ஆண்டு இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டத்தை ஜூன் மாதமே துவங்க வேண்டும். காட்டன் நுாலையே சேலை உற்பத்திக்கான பாவு நுாலாக வழங்க வேண்டும்.

Tags

Next Story