ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
X

குண்டம் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன்.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஈரோடு கோட்டை சின்னபாவாடியில் செங்குந்தர் சமூகத்தார் சார்பில் பத்ரகாளியம்மன் கோவில் பூச்சாட்டு மற்றும் குண்டம் திருவிழா நடந்தது. கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய, இத்திருவிழாவில் 20ம் தேதி பூச்சாட்டப்பட்டது.

தொடர்ந்து, 21ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, 22ம் தேதி அக்னி கவாளம் எடுத்து நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.


நேற்று (ஜன.23) இரவு கோவில் வளாகத்தில் குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, இன்று (ஜன.24) காலை காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள் ஓம் சக்தி பராசக்தி பத்ரகாளியம்மனே என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். விழாவில், காலையில் இருந்து மாலை வரை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இதன், பிறகு பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. பிறகு மறு அபிஷேகம் நடந்தது. நாளை மறுநாள் (ஜன.26) மறுபூஜையுடன் விழா முடிவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் விழா கமிட்டியார் செய்து இருந்தனர்.

Tags

Next Story