நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு
X

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி. 

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022க்கு கடந்த 16ம் தேதி பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story