/* */

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானலில் நள்ளிரவில் கொட்டிதீர்த்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மழைகளின் இளவரசி என அழைக்கப்படுவது கொடைக்கானல். சிறந்த கோடை வாசஸ்தலமான இது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.காலையில் மாணவ- மாணவிகள், பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை அவ்வப்போது சாரல் மழை, மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மதியம் திடீரென பெய்த சாரல் மழை, கன மழையாக மாறியது. சுமார் 2 மணி நேரமாக பெய்த கன மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகள், அன்றாட பணிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது.

மேலும் நள்ளிரவு வரை மழை கொட்டித் தீர்த்தது.நேற்றைய திடீர் மழையால் கொடைக்கானல் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப்பணிகள் பாதிப்படைந்தனர். மழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் பெய்த இந்த மழையினால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கொடைக்கானல் வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு தனியார் நிறுவன ஊழியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

Updated On: 11 July 2023 3:08 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  4. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கல்வி
    அரசு மாணவர்களுக்காக 37 லட்சம் வங்கிக் கணக்குகள்: அஞ்சல் துறையுடன்...
  7. திருவண்ணாமலை
    கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு...
  8. ஈரோடு
    அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ்...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஊர்வலம்