/* */

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

இந்த தலைமை அரசு மருத்துவமனை தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யாக உள்ளதால் கட்டிடங்களில் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

HIGHLIGHTS

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
X

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் இடிந்து விழுந்த சன்ஷேடு

அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள ஜன்னல் சன்ஷேடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருவது வழக்கம். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சில வருடங்களுக்கு முன்பு புதிதாக அவசர சிகிச்சை மற்றும் தலை காயத்திற்க்காக இரண்டு அறைகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இக்கட்டிடம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்து ஏற்பட்டாலும் மற்றும் அவசர சிகிச்சைக்கு கொண்டு வருவார்கள் . அதேபோல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு விபத்தில் சிக்கும் நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு வருவது வழக்கம். இந்நிலையில்நேற்று இரவு அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் சாய்வு தளம் மேற்புறம் உள்ள ஜன்னல் சன்சைடு இடிந்து விழுந்தது இடிந்து விழுந்தது . இந்தப் பாதையில் தான் நோயாளிகள் ஊழியர்கள் மற்றும் போலீஸ் பகுதியில் உள்ள காவலர்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் கொண்டுவரப்படும் நோயாளிகளையும் வண்டிகள் மூலம் கொண்டு வரவேண்டும்.அதிருஷ்டவசமாக நோயாளிகளே அல்லது மருத்துவமனை ஊழியர்கள் யாரும் செல்லவில்லை .

சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைமை அரசு மருத்துவமனை தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று கூறப்படும் நிலையில் மருத்துவமனையில், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கு மாநில அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து இடிந்து விழும் நிலையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 24 Oct 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை