/* */

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: தர்மபுரி கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமை ஆட்சியர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: தர்மபுரி கலெக்டர் ஆய்வு
X

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சாலை விநாயகர் கோவில் தொருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை சாலையில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்கச்சாவடி மையங்களில் இன்று (13.11.2021) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை ஆட்சியர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவ்வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் இருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட படிவங்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டுமெனவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாமினை சிறப்பாக நடத்திட அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் கடந்த 01.11.2021 தொடங்கி வருகின்ற 20.12.2021 வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 860 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1479 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் இன்று நடைப்பெற்றது.

கடந்த 01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடைய உள்ளவர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்காதவர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்க படிவம் 6-ல் விவரங்களை பூர்த்திசெய்து உரிய ஆவணங்களோடு அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது இணையதளம் (www.nvsp.in/Voter Help line mobile app) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் இன்றைய (13.11.2021) தினம் மற்றும் நாளை 14.11.2021, ஞாயிற்றுக்கிழமை, வருகின்ற 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய 4 நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 24X7 செயல்பட்டுவரும் கட்டணமில்லா தொடர்பு எண் 1077 மற்றும் 1950 வாயிலாகவும் வாக்காளர்கள் தங்களது புகார்கள்/தகவல்களை தெரிவிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று ஒருவர் இடம் பெயர்ந்து இருந்தாலோ, இறந்து போயிருந்தாலோ படிவம் 7-லும், பதிவில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனில் படிவம் 8-லும், முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் படிவம் 8ஏ- விலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரி மூலமாகவும் விண்ணபிக்கலாம்.

இந்த ஆய்வின் போது தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருத்தனார்.

Updated On: 13 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?