/* */

தொப்பூர் கணவாயில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: தூத்துக்குடி டிரைவர் சாவு

தொப்பூர் கணவாயில் டைல்ஸ் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தூத்துக்குடி டிரைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தொப்பூர் கணவாயில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: தூத்துக்குடி டிரைவர் சாவு
X

தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

தூத்துக்குடி மாவட்டம், சிலுவாப்பட்டி தாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி இவரது மகன் ராமர் வயது 34. டிரைவர். இவர் ஓசூரில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் டைல்ஸ் ஏற்றிகொண்டு சென்று கொண்டிருந்தார்.

இவர் காலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தார் .தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதியில் செல்லும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடியது.

இதில் கண்டெய்னர் மட்டும் தனியாக கழன்று இடது புற சாலையில் கவிழ்ந்தது. டிரைலர் தனியாக சேலம் தர்மபுரி சாலையில் பாறையில் மோதி நின்றது. இதில் டிரைவர் ராமர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் சரிசெய்தனர்.

Updated On: 25 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  3. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  5. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  6. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  8. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  9. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!