/* */

மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார்

மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார் கரிக்கோல யாத்திரையாக புறப்பட்டார்.

HIGHLIGHTS

மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார்
X
கருடாழ்வார் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.

16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவான் சிற்பம் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பக்கலைக் கூடத்தில் லோகநாதன் ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட மூலவர் விக்கிரகம் மாமல்லபுரத்திலிருந்து கரிக்கோல யாத்திரையாக இன்று காலை புறப்பட்டார். அதற்கான முன் ஏற்பாடுகள் இன்று நடைபெற்றது, முன்னதாக சிறப்பு வழிபாடு செய்து கருடாழ்வார் சிற்பத்தை வாகனத்தில் ஏற்றினர். செல்லும் வழியில் செங்கல்பட்டில் பக்தர்களுக்கு ஆசிவழங்கி வாலாஜா தன்வந்திரி பீடத்திற்கு சென்றது.

பட்சி ராஜாவாக விளங்கும் கருட பகவான் திருமாலின் வாகனமாக விளங்குகிறார். இவர் காசியபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவலோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரையே சாரும். விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை 'பெரிய திருவடி' என்றும் ஆஞ்சநேயரை 'சிறிய திருவடி' என்றும் கூறுவர். வாசுகி என்னும் பாம்பை பூணுலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேஷனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன். கருட பகவனை தரிசிப்பதால் பல்வேறு தோஷங்கள் விலகும் என்கின்றது வேதம்

சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத்தடை, புத்திரத்தடை, பூமிதோஷம், வாகனத்தடை, கல்வித்தடை, உத்தியோகத்தடை, ஏழரை சனி தோஷங்கள், வெளிநாடு செல்லும் தடைகள் மற்றும் குடும்பத்தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். விஷ்ணுவின் அருள் கிடைத்து நற்கதி அடையலாம். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியம் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் அழிவர். எதிரியற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, புத்தி, பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், பண வரவு அதிகரிக்கும், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கையிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை என்னும் கிராமத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் எனும் 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவலிங்க ரூபமாக 468 சித்தர்களும் அமைந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அமைந்து அருள்பாலித்து பூலோக வைகுண்டமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 88வது திருச்சன்னதியாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் அமையவுள்ளார் 'ஓம் ஸ்ரீ தன்வந்திரி கருடாய நமஹ' என்ற சக்திமிக்க மந்திரத்தை பக்தர்கள் கைப்பட எழுதிய கோடிக்கணக்கான மந்திரங்களைக் கொண்டு அமையவுள்ள பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானுக்கு பாரத தேசத்தில் மிகப்பெரிய ஆலயமாக முதல் முதலில் அமையவுள்ளது தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்கு பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக தன்வந்திரி பீட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 5 Jan 2022 6:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...