/* */

தரைபாலத்தில் வெள்ளம்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம், குருவன்மேடு-ரெட்டிபாளையம் தரைபாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தரைபாலத்தில் வெள்ளம்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
X

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

செங்கல்பட்டு அடுத்த, குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோயில் ஆகிய நகரில் உள்ள பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு, குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் ஆகிய இரு தரைப்பாலங்கள் உள்ளது. சில தினங்களாக பெய்த கனமழையால், தென்னேரி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த, நான்கு நாட்களாக, குருவன்மேடு-ரெட்டிபாளையம் ஆகிய இரு தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து பாய்ந்தோடுகிறது. இதனால், செங்கல்பட்டிலிருந்து குருவன்மேடு வரும் அரசு நகர பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குருவன்மேட்டிலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் கிராமவாசிகளும் அவதிப்படுகின்றனர். மேலும் தரைபாலத்தில் அபாயகரமாக ஓடும் வெள்ளநீரின் ஆபத்தை உணராமல் சிலர் குளித்தும் துணிகளை துவைத்தும் வருகின்றனர். எனவே, கிராமவாசிகள் நலன்கருதி, குருவன்மேட்டில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Nov 2021 11:30 AM GMT

Related News