/* */

அரியலூரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அரியலூர் நகரில் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான நாய்களை பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

அரியலூரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X

அரியலூர் தெருக்களில் கும்பல் கும்பலாக சுற்றி திரியும் நாய்கள்.

அரியலூரில் குறைந்த பட்சம் தெருவுக்கு 10 நாய்கள் என அதிகபட்சம் 2ஆயிரம் கும்பல் கும்பலாக சுற்றி வருகிறது. தினமும் ஏதேனும் யாராவது ஒருவர் நாய்களால் கடிபட்டு தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அரியலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நாய்கள் இல்லாத நகராட்சி நிர்வாகமாக கொண்டு வரப்பட வேண்டும்.

பல நேரங்களில் நாய்கள் துரத்துவதும் அவற்றிடம்மிருந்து மீள்வதே பெரிய சாதனையாக இருக்கிறது. பகல் இரவு அதிகாலை என்று பாகுபாடு இல்லாமல் நாய்கள் அரியலூர் நகர மக்களை துன்புறுத்தி வருவது வேதனை அளிக்கிறது. நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரியவில்லை.

மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி , எம்.எல்.ஏ, வார்டு கவுன்சிலர்கள் கூட்டு முயற்சியில் உடனடியாக நாய்களைப் அரியலூர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முன் வந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

அரியலூர் நகராட்சி உட்பட்ட தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது இதனால் பள்ளி குழந்தைகள் பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிய வில்லை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வரதராஜன், ராமஜெயவேல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 11 Aug 2022 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?