/* */

திருவிழா திருமண மண்டபங்களில் 50 சதவீத அனுமதி கோரி மனு

பந்தல் அலங்கார கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில்திருவிழா திருமண மண்டபங்களில் 50சதவீத மக்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

திருவிழா திருமண மண்டபங்களில் 50 சதவீத அனுமதி கோரி மனு
X

அரியலூர் மாவட்ட பந்தல் மற்றும் அலங்கார கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட . க்கு கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அம்மனுவில் திருமணம் மற்றும் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் நபர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம்.

கடந்த ஆண்டு கரானா பரவல் கட்டுப்பாடு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக எங்களது தொழில் துளிர் விடக்கூடிய தருணத்தில் கடந்த 8ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் ஒரு தொழில் முடக்கத்தை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருவிழா நிகழ்ச்சிகளை தடை செய்தும் திருமண விழாக்களில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினால், பந்தல் மற்றும் அலங்கார கலைஞர்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகி 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் திருமண மண்டபங்களில் 50 சதவீத மக்கள் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தனிநபர் இடைவெளி முக கவசம் அணிதல். பரிசோதனை கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தல் ஆகியவை மேற்கொள்ள நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது

Updated On: 15 April 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்