/* */

கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேராேட்டம்: 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.18ம் தேதி திங்கட்கிழமை உள்ளுர் விடுமுறை

HIGHLIGHTS

கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேராேட்டம்: 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
X

கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 18ம் தேதி திங்கட்கிழமை உள்ளுர் விடுமுறை.

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 18.04.2022 (திங்கட்கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுர் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும், இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

18.04.2022 (திங்கட்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அனுசரிப்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு, 07.05.2022 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது. மேலும், அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன்கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 April 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு