/* */

அரியலூர் அரசு பள்ளியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி

மாவட்ட கலெக்டர் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி அரங்கில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினார்.

HIGHLIGHTS

அரியலூர் அரசு பள்ளியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி
X

அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி அரசு மாதிரி பள்ளியில் நடைபெற்றது.

அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 08.04.2022 அன்று நடைபெற்றது. இக்கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அறங்கில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினார்.

இக்கண்காட்சியில் 86 பள்ளிகளிலிருந்து 240 மாணவர்கள் கலந்துக்கொண்டு தங்களின் தனித்திறமையில் ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட படைப்புகளை 16அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சியானது, 9ம் முதல் 12ம் வகுப்பு வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏழு தலைப்புகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு தலைப்புகளிலும் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகளையும் பாராட்டு சான்றுகளையும் முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமன் அவர்களால் வழங்கப்பட உள்ளது. உணவு, பொருட்கள், உலகில் நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள், நகரும் பொருட்கள், வேலை செய்யும் பொருட்கள், இயற்கை தத்துவம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகிய 7 மூக்கிய தலைப்புகளில் காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டது.

தொடக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி (அரியலூர்), ஜோதிமணி (உடையார்பாளையம்), பேபி (செந்துறை). ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளாகள் இராஜபிரியன் மற்றும் குணசேகரன், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இராஜேந்திரன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டைல்காந்த், பள்ளி துணை ஆய்வாளர்கள் இளங்கோவன மற்றும் செல்வகுமார், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி, தலைமை ஆசிரியர்கள் அறிவழகன், செல்வநாயகம், வேல்முருகன், ஆதிரை, வெற்றிச்செல்வி, குமார், முன்னாள் பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, ஆசிரியர்கள் மற்றம் மாணவர்களும் கலந்து கொண்டு கண்காட்சியினை சிறப்பித்தனர்.

விழாவின் முடிவில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கண்காட்சி ஒருங்கிணைப்பு குழுக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 8 April 2022 6:58 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  2. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  3. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  4. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  7. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  8. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...