/* */

அரியலூர்: தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

அரியலூர் மாவட்ட தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ள இறுதி வாய்ப்பினை கலெக்டர் வழங்கி உள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர்: தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர், வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட (அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை) மேல்நிலைபள்ளிகளில் அமைக்கப்பட்ட மேல்நிலைத் தேர்வு மையங்களில் மார்ச் 2014 பருவம் முதல் செப்டம்பர் 2018 பருவம் வரையிலான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அம்மதிப்பெண் சான்றிதழ்கள் அத்தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

அவ்வாறு தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் மேல்நிலை இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தற்போது இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு தனித் தேர்வர்கள் தேர்வெழுதியதற்கான சரியான ஆதரத்துடன் கோரும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பிய தனித்தேர்வர்களின் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் ஆகிய சான்றிதழ்களும் இவ்வலுவலகத்தில் உள்ளன.

அரசுத் தேர்வுத் துறை விதிமுறைகளின் படி, மேற்கண்ட பருவங்களுக்கான மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படவுள்ளது. எனவே, மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் இவ்வலுவலகத்தை அலுவலகப் பணிநாட்களில், அலுவலக வேலைநேரத்தில் (தேர்வெழுதியதற்கான ஆதரத்துடன்) நேரில்அணுகியோ, அல்லது தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கைக் கடிதத்துடன் ரூ 45/- மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறை மற்றும் தேர்வுக் கூடஅனுமதி சீட்டு அல்லது தற்காலிக மதிப்பெண் பட்டியலின் அச்சுப் பகர்ப்பு நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என இதன் கண் அறிவிக்கப்படுகிறது.

இந்த இறுதி வாய்ப்பினை தனித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Nov 2021 10:45 AM GMT

Related News