/* */

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரிக்கை
X

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு (பைல் படம்).

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படாது என மாவட்ட நிர்வாகமும் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் சிவசங்கரும் அண்மையில் உறுதி அளித்திருந்த நிலையில் மீண்டும் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது பேரதிர்ச்சியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் என்பது டெல்டா பகுதிகளில் வருகிறது. மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள புதுக்குடி குருவாலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களில் வேளாண் நிலங்களும் அருகில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களும் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் இராசேந்திர சோழனின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரி உட்பட பல்வேறு நீர்நிலைகள் வரண்டு விடும் நிலை ஏற்படும்.

புதுக்குடி கிராமங்களில் ஆயிரக்கணக்கான கிணறுகள் உள்ளது. அவற்றில் தண்ணீர் தேன் போன்ற அருமையான சுனை நீர் போல இருக்கிறது. அத்தகைய தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தால், புதுக்குடி கிராமங்களில் நீரூற்றுகள் அழிக்கப்படும் நிலை உருவாகி விவசாயிகள் விவசாயம் செய்வதை விடுத்து ஊரை காலி செய்யும் நிலை உருவாகும்.

எனவே தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 17 Dec 2021 8:49 AM GMT

Related News