/* */

அரியலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 363 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

அரியலூர் மாவ்ட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 363 மனுக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

அரியலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 363  மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
X

அரியலூர் மாவட்டத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 363 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், எரவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வகுமார் என்பவர் தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

அக்கோரிக்கை மனுவினை கனிவுடன் பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மேற்படி நபருக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டதன் பேரில், ரூ.7,650 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.62,916 மதிப்பில் உருபெருக்கி, மடக்கு சக்கர நாற்காலிகளையும், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா காளிமுத்து என்பவர் துபாய் நாட்டில் இறந்தது தொடர்பாக வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.1,30,514 மற்றும் தழுதாழைமேடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்தது தொடர்பாக வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகையான ரூ.1,22,549 க்கான காசோலைகளை அவர்களது உறவினர்களிடம் மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Oct 2021 11:27 AM GMT

Related News