/* */

மழையில் நனைந்து வீணாகும் நெல்: அரியலூர் விவசாயிகள் கோரிக்கை

மழையில் நனைந்து வீணாகும் நெல் அனைத்தையும் உடனடியாக சேமிப்பு கிடங்குகள் எடுத்துச் செல்ல அரியலூர் விவசாயிகள் வலியுறுத்தல்.

HIGHLIGHTS

மழையில் நனைந்து வீணாகும் நெல்: அரியலூர் விவசாயிகள் கோரிக்கை
X

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

அரியலூர் மாவட்டத்தில் 100கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தனியார் வியாபாரிகள் மூலமும் ஒருலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் ஏற்படுத்த வேண்டுகிறேன். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும், உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. இதனை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் சேமிப்பு கிடங்குகளில் இடமில்லாததால் மழையில் நனைந்து வீணாகிறது. அதனை தடுப்பதற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தையும் உடனடியாக சேமிப்பு கிடங்குகள் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

பல இடங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றது. தேங்கிக் கிடக்கின்ற நெல் அனைத்தையும் கொள்முதல் செய்து அதற்குப் பின்பு, முன்னறிவிப்பு செய்து கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புள்ளம்பாடி வாய்க்கால் பாசனப் பகுதியில் சேனாபதி, முடிகொண்டான் கிராமங்களிலுள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட புள்ளம்பாடி வாய்க்கால் பாசன நிலங்கள் வாய்க்கால் சரியாக தூர்வராத காரணத்தினால் பாசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. வயலுக்கு பாய வேண்டிய தண்ணீர் அனைத்தும் வடிகால் மூலமாக கொள்ளிடம் ஆற்றில் வீணாக கலக்கிறது. அதனை தடுப்பதற்கு கீழக்காவட்டாங்குறிச்சியில் இருந்து முடிகொண்டான் வரையில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாசன பகுதியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கோடை பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள மார்க்கெட்டிங் கமிட்டிகளில் பருத்தியை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது முருங்கையை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து அதிக லாபம் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Updated On: 27 May 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்