/* */

நிதியுதவி பெற விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம்

பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் என கலெக்டர் கூறியுள்ளார்

HIGHLIGHTS

நிதியுதவி பெற விவசாயிகள்  ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம்
X

அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணைக்கப்படவில்லை எனில் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் 31.03.2022க்குள் இணைத்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 March 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்