/* */

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற முகாம்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் 6 மற்றும் 20 தேதிகளில் நடக்கிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கிடவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதத்தில் முதல் (06.01.2022) மற்றும் மூன்றாம் (20.01.2022) வியாழக் கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள் கொண்டு நடை பெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முகம் மட்டும் தெரியும் படியான புகைப்படம் - 05 ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வருகைபுரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 4 Jan 2022 6:34 AM GMT

Related News