/* */

அரியலூர்:18 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 18 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர்:18 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
X

பொதுமக்களிடம் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வருவதற்கும், குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் திங்கட் கிழமைகளில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனுக்களை வழங்க தமிழகஅரசு அனுமதித்துள்ளது.

இதனையடுத்து வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடம் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் குறித்த சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் கலெக்டர் அலுவலகம் வாயிலில் மனு கொடுக்கவரும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்ப்பூசி போடப்பட்டுள்ளதா என்று சுகாதாரதுறையினர் விசாரித்து விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டனர்.


18 மாதங்களுக்குப் பிறகு நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனு வாங்குவதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் மனுஅளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

Updated On: 4 Oct 2021 8:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  3. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  6. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு