/* */

செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கு அரியலூர் மாவட்ட செய்தியாளர்கள் சார்பில் நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
X

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்" என்று அறிவித்த தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள . மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட தலைநகர் செய்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட தலைநகர் செய்தியாளர்கள் நலச்சங்கத்தின் கூட்டம் சங்கத்தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் பாலாஜி வரவேற்றார். கூட்டத்தில்

மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் வர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மான்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட தலைநகர் செய்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பத்திரிக்கையாளர் நலவாரியம் மற்றும் செய்தியாளர்களுக்கு குறைந்தவிலையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட தலைநகர் செய்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப்பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் துணைத்தலைவர் அப்துல்பாரி, துணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கேவிமுகமது, இராம்குமார், ஞானசேகரன், கோவிந்தராஜன், ஞானசேகர், சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Updated On: 5 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு