/* */

அரியலூர்: கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக உறுதி ஏற்பு

அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் “எனக்கு வேண்டாம்” என்று கல்லூரி மாணாக்கர்கள் எஸ்.பி முன்னிலையில் உறுதி ஏற்றனர்.

HIGHLIGHTS

அரியலூர்: கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக உறுதி ஏற்பு
X

அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் “எனக்கு வேண்டாம்” என்று கல்லூரி மாணாக்கர்கள் எஸ்.பி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்


அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருட்கள் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், சமூகத்தில் அதன் தாக்கம், சமூக சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


போதைப்பொருள் எதற்கும் தீர்வாகாது மன அழுத்தத்தை குறைக்க போதைப் பொருளை நாடுவது என்பது தவறான ஒரு முடிவாகும். போதைக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று அது அழித்தலாகும்.

பின்னர் இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அனைத்து மாணாக்கர்களும் போதைப் பொருட்கள் எனக்கு வேண்டாம் என்று உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நிலையங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 11 Aug 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?