/* */

தேசிய கொடி பிடித்து அதிகாரிகளுடன் அணிவகுத்து நின்ற அரியலூர் கலெக்டர்

அதிகாரிகளுடன் தேசிய கொடி பிடித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி அணிவகுத்து நின்றார்.

HIGHLIGHTS

தேசிய கொடி பிடித்து அதிகாரிகளுடன் அணிவகுத்து நின்ற அரியலூர் கலெக்டர்
X

அதிகாரிகளுடன் தேசி கொடி பிடித்து நின்றார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிலை அலுவலர்களுக்கு தேசியக் கொடிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (12.08.2022) வழங்கினார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக 75வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவுப்பகுதியாக ஆகஸ்டு 13 முதல் 15 வரை 'அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி' என்ற விழா கொண்டாடப்பட இருக்கிறது.

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 13.08.2022 முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் சார்பில் வரையப்பட்ட இந்திய திருநாட்டின் வரைபடத்தினை பார்வையிட்டு, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தேசியக்கொடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும், மகளிர் சுயஉதவிக்குழுவினர் வரைந்த வரைபடத்தின் அருகில் மாவட்ட நிலை அலுவலர்களை வரிசையாக நிற்க வைத்து, தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கியதுடன், பள்ளி மாணவர்களை 'பறக்குது பாரீர்! மணிக்கொடி பவள விழா ஆண்டில் அரியலூர் முழுவதும் ஒளிர்வதைக் காணீர்!' என்ற வார்த்தை சொற்றொடரை வாசிக்க செய்து, அவர்களுக்கு தேசியக்கொடியை வழங்கினார்.

பின்னர், பள்ளி மாணவர்களிடம் தேசிய கொடி ஏற்றி விழாவினை கொண்டாடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளான தேசிய கொடியை சாய்வாக பறக்கவிடக் கூடாது. சேதமடைந்த மற்றும் அழுக்கடைந்த தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது. தேசிய கொடியை பிறகொடிகளுடன் பறக்க விடும்போது தேசிய கொடியின் உயரம் குறைவாக இருக்க கூடாது. தேசிய கொடியை மேசையின் மீது விரிப்பாக பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடியின் மீது மலர்கள் மற்றும் பிற பொருட்கள் வைக்கக்கூடாது. தேசிய கொடிகளை திரை சேலையாகவோ பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடி தரையில் பட கூடாது. வாகனங்களில் முன்புறத்திலோ அல்லது பக்கவாட்டிலோ கட்டக்கூடாது. தேசிய கொடிகளை கண்ட இடத்தில் ஏற்ற கூடாது. தேசிய கொடியை திறந்தவெளியிலோ குப்பைத்தொட்டியிலோ போடுதல் கூடாது. விழா முடிவுற்ற பின் தேசிய கொடியினை முறையாக மடித்து பத்திரபடித்தி வைக்க வேண்டும். தேசிய கொடிக்கு கொடுக்க வேண்டிய மாண்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து, இதுகுறித்து தங்களது இல்லங்களிலும் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துரைக்கவும் அறிவுறுத்தினார்.

எனவே, மேற்காணும் விதிமுறைகளை பின்பற்றி 75வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவின் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் விழாவினை அனைவரும் சிறப்பாக கொண்டாடுமாறும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Aug 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!