/* */

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
X

உறுதிமொழி ஏற்றுக் கொண்ட காவலர்கள்.

மே - 21 தேதி ஒவ்வொரு ஆண்டும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் தலைமையில் பின்வரும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம்நாட்டின் மரபுகளின் தளராத நம்பிக்கை உடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களை, வன்முறைகளையும் முழு ஆற்றலுடன் எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடுவோம் என்று காவல் துறை சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அதிவிரைவில் படை காவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Updated On: 20 May 2022 9:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்