/* */

சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகள் குறித்து காணொலிக்காட்சி வாயிலாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்துகொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 69 ஏரிகளும், 16 அணைக்கட்டுகளும் மற்றும் 4 ஆறுகளும் உள்ளன. மேலும் ஆற்று பாதுகாப்புக்கோட்ட கட்டுப்பாட்டில் 26 ஏரிகள், கொள்ளிடம் இடது கரை, புள்ளம்பாடி பிரதான வாய்க்கால் மற்றும் நந்தியார் வாய்க்கால் உள்ளன. நீர்வளத்துறை 2022-23ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் பாசன அமைப்புகள் / ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 549 பணிகளை 4294.904 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.71.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி, மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி அரியலூர் வட்டத்தில் 6 பணிகளும், செந்துறை வட்டத்தில் 1 பணி, ஆண்டிமடம் வட்டத்தில் 1 பணி, உடையார்பாளையம் வட்டத்தில் 8 பணிகளுடம் என மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் ரூ.100 இலட்சம் மதிப்பீட்டில் 16 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பாக கூடுதல் தலைமைச்செயலாளர் (நீர்வளத்துறை) அவர்களால் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை), அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையால் செயல்படுத்தவுள்ள தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையால் செயல்படுத்தப்படும் சிறப்பு தூர்வாரும் பணிகளான வரத்துவாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி பக்க கரைகள் பலப்படுத்தவும், உழவர் குழுக்கள் அமைத்து பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய்யவும், தேவையான கனரக வாகனங்களை உடனுக்குடன் ஆய்வு செய்யும், தேவையான கனரக வாகனங்களை அதிகப்படுத்தவும், ஆக்கிரமிப்பு ஏதும் இருந்தால் அவற்றை அகற்றி நீர்வழித்தளங்களை தூர்வாரவும், ஜல்சக்தி அபியான் போன்ற திட்டங்களை மாவட்டத்தில் செயல்படுத்த அறிவுறுத்தியதுடன் இந்த தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு 30.05.2022-க்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 April 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!