/* */

சிறுநீரக நோய்களை தீர்க்கும் 'சுத்தரத்தினேஸ்வரர்' கோவில்

ஒருமுறை பிரதோஷ வழிபாடு செய்தால், ஒரு கோடி புண்ணியம் தரும் ஊட்டத்துார் சுத்தரத்தினேஸ்வரர் சிவன் கோவில் பற்றி, அறிவோம்.

HIGHLIGHTS

சிறுநீரக நோய்களை தீர்க்கும் சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
X
கோடி புண்ணியம் அருளும் சுத்தரத்தினேஸ்வரர் சிவன் கோவில்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில், அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது. ஆனால் தமிழகத்தில் இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை, தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலரும் அறியாதது.

நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும். பல இடங்களில், இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால், அல்லது கல்லால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை, செயற்கையாக செய்யப்பட்டதல்ல.

பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில், திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த நடராஜர் சிலை, ஆசிய கண்டத்தில், இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இந்த சிலை உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல, சித்தர்களின் நவலிங்க பூஜையால், சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை. இந்த சிலை உருவான பாறை, 'பஞ்சநத பாறை' என்கின்றனர்.

இது மிகவும் அபூர்வமான பாறை; 10 லட்சம் பாறை பூமியில் உருவானால், அதில் ஒன்றுதான் பஞ்சநாத பாறையாக இருக்கும். இந்த கோவிலில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால், ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார். வளர்பிறையில் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, 'பஞ்சாட்சர மந்திரம்' சொல்லி பிரார்த்தனை செய்யும்போது, பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.

நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோவில்தான், இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட கோவில். மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை வேண்டினால், அனைத்தும் நிறைவேறும். திருமண தடை நீங்கும். பஞ்ச நதன நடராஜர் சிறுநீரக சம்பந்தமான நோய் நீக்க வல்லவர். இழந்த பதவிகளை மீட்டு தரும் சக்தி படைத்தவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


திருச்சி மாவட்டம், லால்குடி தாலுாகா, ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் வழிபட்டு நோய்நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படும் இந்தக் கோவில் இந்தத் திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு 'சுத்தரத்தினேஸ்வரர்' என்று திருப்பெயர். அம்பாளின் திருப்பெயர் 'அகிலாண்டேஸ்வரி'. இந்தக் கோவிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் நடராஜன். ஆசியாவிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார். இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என்று நம்பிக்கையுடன் பக்தர்கள் சொல்கின்றனர்.

சிறுநீரக பிரச்சினை தீர்க்க,"ஒரு கிலோ வெட்டி வேரினை, 48 துண்டுகளாக வெட்டி அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த 48 துண்டுகளை நாளுக்கு ஒன்றாக ஒரு டம்ளர் நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக பிரச்சினை தீரும்" என்பதே ஐதீகம்.

இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து பருகி வர, சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது.

இங்குள்ள கொடி மரம் அருகில், மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 15 திதிகள் 12 ராசிகள் 9 கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது, ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக சிருஷ்டிக்கப்படுகிறது என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை.

இந்த கோவில் திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை வழியில் உள்ள பாடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ளது.

Updated On: 2 Oct 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்