leo in tamil rasi-சிம்ம ராசிக்காரர்களுக்கு அண்ணாமலையார் எதிர்காலம் சிறக்க உதவுகிறார்..! எப்படின்னு படீங்க..!

leo in tamil rasi-சிம்ம ராசிக்காரர்களுக்கு அண்ணாமலையார் எதிர்காலம் சிறக்க உதவுகிறார்..! எப்படின்னு படீங்க..!
X

leo in tamil rasi-சிம்ம ராசி (கோப்பு படம்)

leo in tamil rasi-சிம்மம் என்று கூறும்போதே அதன் கம்பீரம் நமக்கு விளங்கும். அதேபோலத்தான் சிம்ம ராசிக்காரர்களும் விளங்குவார்கள்.

leo in tamil rasi-சிம்ம ராசியின் அதிபதி ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியன் என்பதால், சிம்ம ராசிக்காரர்கள் ராஜபோகத்துடன் இருக்க விரும்புவார்கள். அவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எக் காரணத்துக்காகவும் அதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

உணவில் சூடான விருப்பம்

சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டுவதே அவர்களின் இயல்பு. அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பார்கள். பின்னால் இருந்து குறை கூறுவதும், உடன் இருந்தே துரோகம் செய்வதும் அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும் சுவையாக வும் இருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள்.


பேச்சில் வல்லவர்கள்

இந்த ராசிக்கு 2ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியாக புதன் வருவதால், பணத்துக்குக் குறைவு இருக்காது. ஆனால், கையில்தான் தாங்காது. செலவுகள் விரட்டி விரட்டி தொடர்ந்துகொண்டே இருக்கும். புதன் பேச்சுக்கு அதிபதி என்பதால், யோசித்த அந்தக் கணத்தில் பேசுவதில் வல்லவர்கள். .

சுக ஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானமாகிய 4ம் இடத்துக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் தந்தை ஸ்தானமாகிய 9ம் இடத்துக்கும் செவ்வாயே வருகிறார். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், பெற்றோர் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள். அவர்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் அவர்களுக்கு இருக்கும்.

5ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கும், ஆயுள் ஸ்தானமாகிய 8ம் இடத்துக்கும் குரு அதிபதியாக இருப்பதால் நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள். 6 மற்றும் 7ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், அவர்களது வாழ்க்கைத்துணை திறமைமிக்கவராக இருப்பார்.

leo in tamil rasi

படிப்புக்கும் வேலைக்கும் தொடர்பிருக்காது

சிம்ம ராசிக்காரர்கள் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது. பெரும்பாலும் சிலரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் அமையும். பெயர், பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும்வரை காத்திருந்து பணி செய்வார்கள்.


அண்ணாமலையார் தரிசனம் சிறப்பு

சூரியன் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார். சூரியன் நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகராக உள்ள ஒரு தலமெனில் அது திருவண்ணாமலையே ஆகும்.

கொழுந்துவிட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாகக் குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்கமுடியாதபடி விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணாமலை தலம் விளங்குவதாக ஸ்காந்த புராணம் விவரிக்கிறது.

ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையைசிம்ம ராசிக்காரர்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும்.

மகம், பூரம் மற்றும் உத்திரம் 1-ம் பாதம் இந்த ராசியில் அடங்கும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!