நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவரா..? அப்டின்னா நீங்க இப்பிடித்தான்..!

நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவரா..? அப்டின்னா நீங்க இப்பிடித்தான்..!
X

characters of Aries in tamil-மேஷ லக்னக்காரர்களின் குணாதிசயங்கள்.(கோப்பு படம்)

Characters of Aries in Tamil-மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி அவர் விரும்பியபடி கிடைக்காதாம். அப்ப பாவம்தான்..!

Characters of Aries in Tamil-சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்னம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு லக்னக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.


மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்?

பொருள் ஈட்டுவதில் கில்லாடிகள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஆதிக்கம் இருக்கும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரத் தோற்றம் கொண்டிருப்பார்கள். பொருள் ஈட்டுவதில் கில்லாடிகள். பணம் சேமிப்பதில் கெட்டிக்காரர்கள். அறிவும் அழகும் பொருந்தியவராக இருப்பார்கள். எல்லோராலும் விரும்பப்படும், மதிக்கப்படும் மனிதர்களாக இருக்க விரும்புவார்கள். முன்கோபமும்,பிடிவாத குணமும் பிறவிக்குணமாக இருக்கும்.

திறந்த மனம்

பேச்சிலும், நடத்தையிலும் ஒளிவு மறைவு கிடையாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதுவும் சரியாக நேர்த்தியாக பேசுவார்கள். எந்த வேலையாக இருந்தாலும் சரி வேகமாக செய்ய விரும்புவார்கள். வேகத்தினால் விவேகம் இவர்களிடம் குறைந்து போகும்.

அறிவாளிகள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மையுடன் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் இருக்கும். கோபமோ அல்லது மகிழ்ச்சியோ எதையும் பெரிதாக வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள். உணர்ச்சிகளை கட்டுபடுத்தக் கூடியவர்கள். இவர்கள் மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். நிர்வாகப் பணிகளில் அவர்களுக்கென ஒரு தனி வழியில் சிறந்து விளங்குவார்கள்.

சுயமரியாதைக் காரர்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் உடல் வாகு சற்று குண்டாக இருப்பார்கள். இவர்கள் சுயகௌரவம், சுயமரியாதை போன்றவைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர்கள். சுய மரியாதையையும், சுயகௌரவத்தையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.புதிய கருத்துகள், புதிய யோசனைகள் வழங்குவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனால்தான் இவர்கள் எப்போதும் சிந்தனை உடைவார்களாகவே இருப்பார்கள். இவர்கள் பேச்சில் அதிகாரம் நிறைந்திருக்கும்.

விரும்பும் மனைவி கிடைக்காதாம்..! (பாவம்) (சப்பாத்தி கட்டையெல்லாம் பறக்குமோ..?)

சிறு வயதில் பெரிய கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்தாலும் நடுத்தர வயதில் எல்லா வளமும் வசதியும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இருந்தாலும் சில நேரங்களில் தேவை இல்லாத விஷயத்தில் தலையிட்டு பிரச்னையில் சிக்கிக் கொள்வார்கள். இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாழ்க்கைத் துணை அமைவது சந்தேகமே. இவர்கள் எளிதாக பிறரை நம்பி ஏமாந்துவிடுவார்கள்.

ஸ்டைல் மன்னர்

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் அதிக அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்கள். தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும் ஆடைகள் அணிவதிலும் தனிக்கவனம் செலுத்தி நேர்த்தியானவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி என்ற எண்ணம் கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story