/* */

கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?- வங்கி வட்டியை விட இதில் அதிகம்

Kisan Vikas Patra Scheme in Tamil- பண மடங்கு இரட்டிப்பு, வங்கி வட்டியை விட அதிகம் மட்டுமல்லாது வரிச்சலுகை உள்ளிட்ட வசதிகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இந்திய தபால் துறையின் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம்.

HIGHLIGHTS

கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?- வங்கி வட்டியை விட இதில் அதிகம்
X

Kisan Vikas patra scheme in Tamil - கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?

Kisan Vikas Patra Scheme in Tamil- பண மடங்கு இரட்டிப்பு, வங்கி வட்டியை விட அதிகம் மட்டுமல்லாது வரிச்சலுகை உள்ளிட்ட வசதிகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இந்திய தபால் துறையின் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம்

இந்திய தபால் துறையில் பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்கள் இருந்த போதிலும், அதில் மிகவும் பிரபலமான திட்டம் என்றால் கிசான் விகாஸ் பத்திர திட்டம் தான் ஆகும்.

தபால் துறையில் இருக்கும் PPE, NSE திட்டங்கள் போலவே கிசான் விகாஸ் பத்திர திட்டத்திலும் பல நன்மைகளும் மற்றும் சில இடர்களும் உள்ளது. பொதுவாக சிறு முதலீட்டாளர்கள் இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடுவார்கள் எனவே சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக கிசான் விகாஸ் பத்திரம் உள்ளது.

இது அரசின் ஒரு பாதுகாப்பான, நிரந்தர வருவாய் தரக்கூடிய திட்டம் என்பதால், இதில் சந்தை அபாய பயம் அறவே இல்லை.

இரட்டிப்பாகும் முதலீடு : குறிப்பிட்ட காலத்தில் உங்களின் முதலீடு இரட்டிப்பாகும். மேலும் இந்த திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். எனினும் இந்த திட்டத்தின் நல்ல அம்சமே நீங்கள் இணையும்போது கிடைக்கும் வட்டியை போல, இறுதி வரையிலும் கிடைக்கும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்? : இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.

தகுதிகள் : அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும், இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் ஆவர். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும்.

வரிச்சலுகை : அரசின் இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும், மற்ற திட்டங்களை போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.

என்னங்க கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் சேர புறப்பட்டுட்டீங்களா?


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 5:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்