உலகப்பொதுமறை திருக்குறளை எழுதிய வள்ளுவர் பற்றி தெரியுமா உங்களுக்கு?.....
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் (கோப்பு படம்)
thiruvalluvar in tamil
திருவள்ளுவர் இரண்டடி செய்யுளினால் நமக்கு நீதிக்கருத்துகளைச் சொன்னார். திருக்குறளைப் படித்தவர்கள்தன் வாழ்நாளில் இதனை மறக்க முடியாது. இக்கட்டான நேரத்தில் இருந்தாலும் இது ஒரு அறிவுரை வாசகம் போன்று நம் மனதில் நிழலாடும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இரண்டடியில்தான்குறள் என்றாலும் கருத்துகள் அவ்வளவு அர்த்தம் உள்ளவைகளாக இன்றளவில் இருந்து வருகிறது. அவர் மறைந்தாலும் அவரது நுால் அவரது பெயரை இன்று வரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.சங்க காலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க காலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். .
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது] காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது
thiruvalluvar in tamil
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு கடலின் நடுவே 133 அடியில் சிலை எழுப்பப்பட்டுள்ளது (கோப்பு படம்)
thiruvalluvar in tamil
.சிறப்புப் பெயர்கள்
தேவர்,நாயனார்,தெய்வப்புலவர்,செந்நாப்போதர்,பெருநாவலர்,பொய்யில்புலவர்,பொய்யாமொழிப்புலவர்,மாதானுபங்கி,முதற்பாவலர்,புலவர்களின் பாராட்டுகள்பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.
இவரை,"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என பாரதியாரும்,"வள்ளுவனைப் பெற்றதால்பெற்றதே புகழ் வையகமே"என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
திருக்குறள்
இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:ஞான வெட்டியான்
பஞ்ச ரத்னம்இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்
"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"
இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது.இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன.
சமயமும் சமணமும்
திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்
thiruvalluvar in tamil
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் (கோப்பு படம்)
thiruvalluvar in tamil
சைவமும்
திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்[6], ஆள்வினையுடைமை[7] எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.
திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.
சான்றுடன் திருவள்ளுவரின் காலம்: அரை நூற்றாண்டிற்கு முன், வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்ததாகத் தெரிகிறது. சங்க காலங்களில், புலவர்கள், அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே, பரிசுகள் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள், தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க காலப் புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மாமூலனார், மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம், மாமூலனார் காலம் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.
ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றிய குறிப்பும், ஆரியர்கள், தமிழகம் நுழைந்த பிறகு, இந்திரனைப் பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர், திருக்குறளை, ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும். இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரிய வருகின்றன. இதன் மூலம், வள்ளுவர் காலம், குறைந்தது பொ.ஊ.மு. 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்.
thiruvalluvar in tamil
thiruvalluvar in tamil
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார்பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர்,. அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.
முன்னாள் முதல்வர் வெளியீடு
பிறகு இந்தப் படம், 1960இல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால், காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார்பிறகு இதே படம், ஒன்றிய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1995 இல் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி ஒன்றிய அரசால் இதே படத்தை அடிப்படையாக கொண்ட இந்திய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.1
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu