/* */

திருச்சியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி டாக்டர்கள் உறுதி மொழி ஏற்பு

திருச்சி

HIGHLIGHTS

திருச்சியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி டாக்டர்கள் உறுதி மொழி ஏற்பு
X

உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சியில் டாக்டர் அஷ்ரப் தலைமையில் டாக்டர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வார காலமும் மருத்துவ துறை சார்பில் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சியில் இந்திய மருத்துவ மன்ற வளாகத்தில் ஐ.எம்.ஏ, இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம், தேசிய பச்சிளம் குழந்தைகள் அமைப்பு, திருச்சி மகளிரியல் மருத்துவ நிபுணர்கள் அமைப்பு ஆகியவை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தாய்ப்பாலின் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகள் மற்றும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பற்றி மருத்துவ பேராசிரியர்கள் பீட்டர், லஷ்மி பிரபா, செந்தில்குமார் ஆகியோர் பேசினார்கள்.


இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ மன்றத்தின் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் அஷ்ரப் உலக தாய்ப்பால் வார விழா உறுதி மொழியை படிக்க அதனை அனைத்து டாக்டர்களும் திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.

அப்போது டாக்டர்கள் எங்கள் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என உறுதி அளித்தனர்.

Updated On: 8 Aug 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...