வில்லனாக நடிக்கும் விமல்... அவரே சொல்றார் பாருங்கோ!
![வில்லனாக நடிக்கும் விமல்... அவரே சொல்றார் பாருங்கோ! வில்லனாக நடிக்கும் விமல்... அவரே சொல்றார் பாருங்கோ!](https://www.nativenews.in/h-upload/2023/04/24/1703815-vimal-act-as-villain-in-a-movie.webp)
விமல், சிவா இணைந்து நடித்து சுந்தர் சி இயக்கிய படம் கலகலப்பு. காமெடித் திரைப்படமான இது தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்று. அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்த இந்த படம் போல மீண்டும் எப்போது படம் செய்வீர்கள்?
விமல் பதில்: அடுத்தடுத்து படங்களில் அதுமாதிரி பார்க்கலாம். அடுத்து ம பொ சி எனும் ஒரு படம் நடிக்கிறேன். அது ஒரு வரலாற்று திரைப்படம். 80களில் நடைபெறும் கதை. அதில் களவானி விமலையும் பார்க்கலாம். கடைசி அரை மணி நேரத்திற்கு நடிப்புக்கு ஸ்கோப் உள்ள ஒரு படமாகும்.
மைக்கேல் எனும் புதுமுக இயக்குநருடன் ஒரு படம் பண்ணப் போகிறேன். அதில் முதன்முறையாக சென்னை பேச்சு வழக்கில் பேசுகிறேன். இதுவரை நான் சென்னை பேச்சு வழக்கு பேசி நடித்தது இல்லை. முதல் முறையாக இப்படி நடிக்கவிருக்கிறேன்.
கேள்வி: இந்த சினிமா உலகத்தில் நிறைய பேர் நிறைய விதமாக பேசுவார்கள். சிலர் நேர்மறையாக பேசுவார்கள். சிலர் எதிர்மறையாக பேசுவார்கள். உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக எந்த விசயத்தைக் குறிப்பிடுவீர்கள்
விமல் பதில் : அனுபவங்கள்தான் எனக்கு நிறைய விசயங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. சினிமாவுக்கு வந்த 12, 13 வருடங்களில் நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். எப்படி ஸ்க்ரிப்ட் தேர்ந்தெடுப்பது, யார் யாரைப் பக்கத்தில் வைத்துக் கொள்வது, எப்படி செயல்படுவது என நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன.
கேள்வி : நிறைய பேருக்கு எக்ஸ்பெரிமெண்ட்டாக ஒரு ஸ்க்ரிப்ட் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும். உங்களுக்கு அப்படி எதாவது எக்ஸ்பெரிமண்ட் செய்ய விரும்பும் கதை இருக்கிறதா?
விமல் பதில் : விலங்கு வெப் சீரிஸ் மாதிரி முழுக்க முழுக்க சீரியஸ்ஸான விமலை பார்க்க நான் ஆசைப்படுகிறேன். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் நடிக்க ஆசை. இப்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் அதைப் பற்றி பேச பெரிதாக எதுவும் இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu