டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-06-17 01:00 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ( மாதிரி படம்)

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டா ஆப்ரேட்டர் பணி நிரப்பப்பட உள்ளது இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

திருவண்ணாமலை தேசிய நல்வாழ்வு குழுமம், மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் சார்பில் இரண்டு டேட்டா ஆப்ரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  தேசிய நல வாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள இரண்டு டேட்டா ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி

கணினி பட்டதாரி ஆக இருக்க வேண்டும்  அல்லது  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் மாதம் ரூபாய் 13 ஆயிரத்து 500

தேவையான ஆவணங்கள், கல்வி தகுதி சான்று மதிப்பெண் சான்று 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

கவுரவ செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம்,  செங்கம் சாலை,  திருவண்ணாமலை

நிபந்தனைகள்

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.  எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.  வருகிற 22.6 .2024 மாலை 4 மணிக்குள் நேரிலோ,  தபாலிலோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது  என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவித்துள்ளார்.

Similar News