திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-28 00:45 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்,  நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் அன்பழகன், துணைத்தலைவர் சம்பத், ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயலாளர் சீத்தாராமன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தூய்மை பணியாளருக்கும் அரசாணைப்படி ஊதியம் நிர்ணயித்து இயக்குனரகத்தில் இருந்து தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தூய்மை பணியாளர் நலன்காக்க காலமுறை ஊதியக்கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட பொருளாளர்கள் ஏழுமலை, நாராயணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News