திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!

பிளஸ் டூ தேர்வில் திருவண்ணாமலைக்கு கடைசி இடம் என்பது வேதனையான விஷயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-06 12:57 GMT

செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் அனைத்தும் முடிந்தும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று அதன் நிறைவுக்கு பின்பு மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இன்று காலை தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 24,021 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.47 சதவீதம் ஆகும்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்


திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் 12724, மாணவிகள் 13827 மொத்தமாக 26551 பேர் தேர்வு எழுதினர். இதில் 12724 மாணவர்களில் 11,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1687 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 13827 மாணவிகளில் 12,984 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 843 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் 86.74 சதவீதம், மாணவிகள் 93.90 சதவீத மட்டுமே பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் மாணவ, மாணவிகள் என 2530 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 38 வது இடத்தில் உள்ளது.

தேர்ச்சி விகிதம் உயர்ந்து இருந்தாலும் கூட கடைசி இடத்தில் இருப்பது வேதனையான விஷயம்தான்.

அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் உற்பத்தி ஐந்தாவது இடத்தில் உள்ளது மொத்தம் உள்ள 152 பள்ளிகளில் 18,342 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருந்தார்கள் அதில் 6755 மாணவர்களும் 9352 மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக 87. 81 சதவீதம் தேர்ச்சியாகும்.

வருகின்ற ஆண்டுகளில் மாணவர்கள் தேர்வை அணுகுகின்ற விதம் எப்படி உள்ளது ? ஆசிரியர்கள் எப்படி கையாளுகிறார்கள், என்பதை ஆராய்ந்து வரும் வருடம் அதை மேம்படுத்துவோம். கடந்த ஆண்டில் நடந்த தவறுகளை கணக்கெடுப்போம்.

ஆரம்ப நிலையில் இருந்து மாணவர்களின் கல்விச்சிறனை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அதிக அளவு தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி கல்வி கற்க செய்ய வேண்டும் . அப்போதுதான் இடை நின்றல் இல்லாமல் போகும். உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.

Tags:    

Similar News