பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு

திருவண்ணாமலையில் பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டு வேட்டி, புடவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Update: 2024-05-08 03:13 GMT

பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு 

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மாலை அணிவித்து பட்டு வேட்டி பட்டுப்புடவை , ஆகியவைகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் வழங்கி பாராட்டினார்.

திருவண்ணாமலையில் இயங்கி வரும் தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி பழம்பெரும் பள்ளிகளில் ஒன்றாகும்.

தற்போது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி 92 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தது.

இதனைப் பாராட்டும் வகையில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஆசிரியைகளுக்கு தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு அதிக மதிப்பெண்ணை பெற்று மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் மாணவ மாணவிகள் திறன் பட ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை மனதில் வைத்து தேர்வு எழுதி முதலிடம் பிடித்த அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் நன்றி இணையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் பேசினார்.

தொடர்ந்து அப்பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மாலை அணிவித்து பட்டு வேட்டி பட்டுப்புடவை வழங்கி கௌரவித்தார்.

இதனைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் ஆசிரியைகள் மனமகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி, உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News