திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

Update: 2024-05-06 01:49 GMT

நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில், எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு 8 மையங்களில் நடைபெற்றது.

நாடு முழுவதும் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேருக்கு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் , 4007 மாணவர்கள் மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு மாணவ ,மாணவிகள் என தேர்வு எழுத்துவதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா இன்டர்நெஷனல் பள்ளி,கண்ணம்மாள் இன்டர்நெஷனல் பள்ளி, ஜீவா இன்டர்நெஷனல் பள்ளி, எஸ் கேவி இன்டர்நெஷனல் பள்ளி, விக்னேஷ் பள்ளி, விருச்சம் இன்டர்னேஷனல் பப்ளிக் பள்ளி, துலிப் இன்டர்நெஷனல் பள்ளி, சேஷாமால் வித்யா மந்திரி பள்ளி ஆகிய பள்ளிகளில் என மொத்தம் 8 இடங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு மையங்களுக்கு காலை 8 மணிக்கு வந்து விட்டனர்.

பிறகு காலை 10:30 மணிக்கு மேல் மாணவர்களை பல கட்ட சோதனைகள் செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள், அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டை, ஹால் டிக்கெட், 2 புகைப்படம் மட்டுமே கொண்டு வந்ததை சரிபார்த்து உள்ளே அனுப்பினார்.

தேர்வு மையத்திற்கு காலை 11:30 மணியிலிருந்து அனுமதிக்கட்டனர் . பகல் 1:30 மணி வரை மட்டுமே மாணவர்களை அனுமதிக்கட்டனர். பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதால், அதன் பிறகு வரும் தேர்வர்கள் விதிகள்படி அனுமதிக்கப்படவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் , 3847 மாணவ ,மாணவியர்கள் தேர்வு எழுதினார்.

Similar News