போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ் எஸ்.பி.

திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கினார் மாவட்ட எஸ்பி

Update: 2024-03-28 10:24 GMT

திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கிய மாவட்ட எஸ்பி. கார்த்திகேயன்.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், நின்றபடி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உடல் சூட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் தொப்பி, கூலிங்கிளாஸ், மோர் ஆகியவை வழங்கப்பட்டன.

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கோடைகாலம் வந்தாலே சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. கோடைகாலத்தின் ஆரம்ப நாட்களிலேயே அதிகபட்சமாக 98 டிகிரி கடந்து வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

ஆன்மீகமான திருவண்ணாமலை நகரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலம் வரும் பக்தர்கள் என எப்பொழுதுமே கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு கோவிலை சுற்றி மாட வீதிகள், கிரிவலப் பாதை மற்றும் திருவண்ணாமலை நகருக்குள் வருகின்ற ஒன்பது சாலைகள் என எப்பொழுதுமே போக்குவரத்து போலீசார் பிஸியாகவே இருப்பர்.

நகரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவல்துறையினா் தங்களை தற்காத்துக் கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்ட எஸ்பி காா்த்திகேயன் வழங்கி வருகிறாா்.

இந்த நிலையில், போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பிகள், கண் கண்ணாடிகள் மற்றும் மோா் , ஜூஸ் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி காா்த்திகேயன் வழங்கினாா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News